
கண்டி மாநகர சபை ஆணையர் சந்தன தென்னகோன் இச்செய்தியினை தேசிய செய்தி ஊடகம் ஒன்றிக்கு உறுதிப்படுத்தினார்.
மேலும், முன்னதாக ‘சிங்கம் மட்டும்’ உள்ளடங்கிய கொடிகள் நகராட்சி ஊழியர்களால் போடப்பட்டன, ஆனால் அவை பின்னர் அகற்றப்பட்டன. நகரத்தை சுற்றி அந்தக் கொடிகள் ஏன் ஏற்றப்பட்டன என்பதை விவரிக்க அவர் மறுத்துவிட்டார்.
$ads={2}
இலங்கையின் தேசியக் கொடியானது, ஒரு வாளேந்திய சிங்கம், செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தை உடைய இரண்டு சிறிய கீற்றுக்கள். அவை இலங்கையில் வாழும் குடிமக்களான தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்த 1972 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டன. மேலும் நான்கு அரச இலைகள் அரசினால் சேர்க்கப்பட்டது. அரசாங்க சட்ட விதிமுறைகளின் படி, குறைபாடுள்ள தேசியக் கொடிகளைக் காட்சிப்படுத்துவது சட்டவிரோத மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும்.