
CMEVயின் கூட்டுநர் மஞ்சுல கஜநாயக்க தெரிவிக்கையில், ஏராளமான வாக்குகள் நிராகரிக்கப்படுவதற்கு நான்கு முக்கிய காரணிகள் முக்கிய பங்கு வகித்தன குறிப்பிட்டிருந்தார்.
1. பொதுமக்களின் தேர்தல் கல்வியறிவு.
2. வாக்குரிமையை பயன்படுத்துவதற்காக வேண்டியே வாக்களிக்கும் சில நபர்கள், ஆனால் வாக்குச்சீட்டை தேவைக்கேற்ப பயன்படுத்தவில்லை.
3. ஐக்கிய தேசிய கட்சிக்கு இடையிலான பிளவு, கட்சி ஆதரவாளர்கள் வாக்களிக்கத் தவிர்ப்பது அல்லது இரண்டு சின்னங்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் தேர்வு செய்வதற்கான குழப்ப நிலை.
4. வாக்குச்சீட்டின் தவறான குறி.

- பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 16,243,885
- அளிக்கப்பட்ட வாக்குகள் – 12,343,309 (75.89%)
- செல்லுபடியான மொத்த வாக்குகள் -11,598, 936 (71.32%)
- நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 744,373 (6.03% அளிக்கப்பட்ட வாக்குகளில், 4.58% பதிவு செய்ய்ப்பட்ட வாக்குகளில்)
- 2020 பொதுத் தேர்தல் – 744,373 (6.03% அளிக்கபப்ட்ட வாக்குகளில்)
- 2019 ஜனாதிபதி தேர்தல் – 135,452 (1.01% அளிக்கபப்ட்ட வாக்குகளில்)
- 2015 பொதுத் தேர்தல் – 517,123 (4.63% அளிக்கபப்ட்ட வாக்குகளில்)