இனியும் மின் தடை ஏற்பட வாய்ப்புண்டு -இலங்கை மின்சார சபை

இனியும் மின் தடை ஏற்பட வாய்ப்புண்டு -இலங்கை மின்சார சபை

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால் தேசிய மின்னோட்ட கட்டமைப்புக்கு வழங்கப்படும் 810 மெகாவோட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் சில பிரதேசங்களில் திடீர் மின்தடை ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர், ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


$ads={1}

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட திடீர் மின்சார கோளாரை தொடர்ந்து நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையமானது செயலிழந்துள்ளது.

நுரைச்சோலை மின்நிலையத்தில் நேற்று உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் தேசிய மின்சுற்றோட்ட கட்டமைப்புடன் இணைக்கப்படாததால் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த மின்நிலையத்தில் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.


$ads={2}

இதனால் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால் தேசிய மின்னோட்ட கட்டமைப்புக்கு வழங்கப்படும் 810 மெகாவோட் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதனால் சில பிரதேசங்களில் திடீர் மின்தடை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post