
அத்துருகிரிய பகுதியை சேர்ந்த 42 வயதான குறித்த நபர் காரொன்றிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றில் திட்டமிடல் முகாமையாளராக கடமையாற்றி வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்ற பின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.