லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் சில பகுதிகளை அண்மையில் பேரழிவிற்கு உட்படுத்தி 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் பிற்பாடு அந்நாட்டு அரசாங்கம் இராஜினாமா செய்துள்ளது.
பிரதமர் ஹசன் டயப் இன்று (10) மாலை அங்குள்ள தேசிய தொலைக்காட்சி ஒன்றில் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அலட்சியம் மற்றும் ஊழல் என்று கூறி நாட்டின் தலைவர்கள் குற்றவாளி என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது, குண்டுவெடிப்பு தொடர்பாக எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


