தெஹியத்த கண்டி- அரலகன்வில பிரதான வீதியின் போகஸ் சந்திப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 07 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட 11 பேரும் மாணவிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதில் நால்வர் பரிதாப நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 14 முதல் 16 வயது வரையிலான 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
அவற்றில் 04 பேர் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றைய 07 பேர் அரலகன்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக வகுப்புக்கு சென்ற குறித்த மாணவிகள் மீது கெப்ரக வாகனம் ஒன்று மோதியதாலே இந்த விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.