நாடலாவிய றீதியில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்; முதல் முடிவு பிற்பகல் எதிர்பார்ப்பு!

நாடலாவிய றீதியில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்; முதல் முடிவு பிற்பகல் எதிர்பார்ப்பு!

பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் இடம்பெற்றிருந்தன.

5.00 மணியளவில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற பின்னர் சுமார் 8 மணியளவில் வாக்குப் பெட்டிகள் யாவும் பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.

இம்முறை தேர்தலில் 71 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு
முன்னர் முதலாவது தேர்தல் முடிவை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் இறுதி தேர்தல் முடிவுகளை இன்று நள்ளிரவு அளவில் வழங்கக்கூடியதாக இருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், இம்முறை தேர்தலில் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருந்த 12,885 மத்திய நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட  16,263,885 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.