அமைச்சர்களுக்கான அமைச்சின் செயலாளர் நியமனம்!

புதிய அமைச்சுக்களுக்கான அமைச்சின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, 25 புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சின் செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமச்சரவை செயலாளராக டபிள்யூ.எம்.டி.ஜே.பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக ஆர்.டபிள்யூ.ஆர்.பிரேமஶ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளராக எஸ்.ஆர்.ஆடிகல மற்றும் கல்வி அமைச்சின் செயலாளராக கபில பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post