
கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நேற்று (07) இடம்பெற்ற சந்திப்பில் கோரிக்கை விடுத்தபோது, ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து 43 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததை நினைவு கூர்ந்ததாகவும், இம்முறை மக்களால் தெரிவு செய்யப்படாத பட்சத்தில் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்ல விருப்பமில்லை என மறுப்பு தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் கட்சித் தலைவர் அப்பதவியை ஏற்காவிட்டால், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் தான் அப்பதவியை ஏற்றுக்கொள்ள விரும்புவதாக அகிலா விராஜ் காரியவசம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆசனத்தை பகிர்ந்து கொள்வதற்காக கட்சிக்குள்ளேயே ஒரு மோதல் சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும், யார் அந்த இடத்தைப் பெற்றாலும், அவர் அடுத்த தலைவராக இருப்பதற்கான அதிக நிகழ்தகவு இருப்பதால் மோதல் நிலைமை அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
பரம்பரை பாரம்பரியத்தின் படி அடுத்த ஐ.தே.க தலைவராவார் என்று நம்பப்படும் ருவான் விஜேவர்தனவுக்கு அந்த இடத்தை வழங்குமாறு கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.