கட்சி வேறுபாட்டால் பறிபோன மைத்திரியின் அமைச்சுப் பதவி??

புதிய அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு வழங்கப்படவிருந்த அமைச்சு பதவியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேறு ஒருவருக்கு வழங்குமாறு கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, அவருக்கு வழங்கப்பட இருந்த அமைச்சு பதவி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் உள்ள மற்றொரு நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், கண்டியில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்து கொண்டிருந்தார்.

சுற்றாடல் துறை அமைச்சை மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்க முன்மொழியப்பட்டது, எனினும் தற்போதைய அந்த அமைச்சு பதவி மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்ற அமைச்சரவை அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post