நாட்டு வளங்களை விற்று சாப்பிட்டும் தற்போதைய அரசாங்கம்; மைத்திரி எவ்வளவோ பரவாயில்லை! -ஞானசார தேரர்

நாட்டு வளங்களை விற்று சாப்பிட்டும் தற்போதைய அரசாங்கம்; மைத்திரி எவ்வளவோ பரவாயில்லை! -ஞானசார தேரர்

நாட்டில் உள்ள பெறுமதியான வளங்களை விற்பனை செய்து சாப்பிடுவது கடந்த அரசாங்கத்தை போன்று தற்போதைய அரசாங்கத்தினதும் கொள்கையாக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று (01) துறைமுகத்திற்கு சென்றிருந்த போதே தேரர் இதனை கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க கடந்த அரசாங்கம் தயாரான போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்து நிறுத்தினார். மைத்திரிபால சிறிசேனவுக்கு இதனை தடுக்க முதுகெலும்பு இருந்தது.

சிறிய துண்டுகளாக விற்பனை செய்யாமல், முழு துறைமுகத்தையும் விற்பனை செய்து விடுமாறு அரசாங்கத்திடம் கூறுகிறோம். ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒரு பகுதியை விற்பனை செய்கிறது. மற்றுமொரு அரசாங்கம் பதவிக்கு இன்னுமொரு பகுதியை விற்பனை செய்கிறது. இறுதியில் ஒரே விதமாக விற்று சாப்பிடுகின்றனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய கடந்த அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை தயார் செய்திருந்ததை நாங்கள் அறிவோம். எப்படி இருந்தாலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு முதுகெலும்பு இருந்தது. எதிர்ப்பு குரல்களுக்கு செவி கொடுத்து மறைமுகமாகவேனும் அதனை தடுத்து நிறுத்தினர்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் தாக்கல் செய்துள்ளார். இவர்கள் எந்த அளவுக்கு அறிவற்றவர்களாக இருக்கின்றனர்? எனவும் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post