கொரோனா பரவலை அடுத்து மத்திய கிழக்கில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு 54000 இலங்கை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தொற்றுநோய் பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் அனைத்தும் தமது வரையறைக்கு அப்பால் சென்று விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6000 பேரை மாத்திரமே உள்வாங்கக்கூடிய வசதிகள் உள்ளன.
எனினும் தற்போது நாடளாவிய ரீதியில் 65 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7058 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய நிலையத்தின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட பின் மேலும் 14 நாட்களில் தமது வீடுகளில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தொற்றுநோய் பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.