
மின்சார தடை ஏற்பட்மைக்கு முக்கிய காரணம் மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என கூறப்படுகின்றது. எனினும் அதற்கு மேலதிகமாகவும் சில பிரச்சினைகள் இருக்கலாம் என மின்சார சபையின் பொறியிலாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
$ads={2}
2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி மார்ச் மாதம் 13ஆம் திகதி நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனையடுத்து 2018ஆம் ஆண்டு 3 பில்லியன் ரூபாய் செலவில் பெல்வத்தையிலுள்ள மின்சார கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
இந்த கட்டமைப்பிலும் சில மோசடிகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது.
$ads={1}
நேற்று மதிய நேரத்தில் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டது. தடைப்பட்ட மின்சார விநியோகம் வழமை நிலைக்கு திருப்ப நீண்ட நேரம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.