டிக் டாக் பாணியில் வரவிருக்கும் யூ டியூபின் 'யூ டியூப் சோர்ட்' !!

டிக் டாக் பாணியில் வரவிருக்கும் யூ டியூபின் 'யூ டியூப் சோர்ட்' !!

டிக்டொக்கில் பதிவேற்றம் செய்யப்படும்  15 முதல் 30 வினாடிகளைக் கொண்ட வீடியோக்கள் மக்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்பைப்  பெற்று வருகின்ற நிலையில் இப் பாணியை யூடியூப்பில் செயற்படுத்த அந்நிறுவனம் ஆலோசித்து வருகின்றது.

இதன் முதற்கட்டமாகக்  குறித்த அம்சத்தினை  யூடியூப் நிறுவனம் அதன் பாவனையாளர்களில் சிலருக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இச் சோதனை முயற்சி வெற்றி பெறுமானால்  யூ டியூபில் டிக்டொக்கைப் போன்று  சிறிய வீடியோக்களை அனைவராலும் பதிவிடமுடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாகக் கடந்த ஏப்ரல் மாதம்  யூடியூப் நிறுவனமானது ‘ YouTube Shorts‘  என்ற பெயரில் சிறிய விளம்பரமொன்றை வெளியிட்டிருந்தது.

குறித்த விளம்பரத்தில் ‘பாவனையாளர்கள் பதிவு செய்து பதிவேற்றம் செய்யும்  வீடியோக்கள் 15 வினாடிகளுக்குள் இருந்தால் அது  நேரடியாக யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்படும். மாறாக 15 வினாடிகளுக்கு மேல் இருந்தால்  குறித்த  வீடியோக்கள் முதலில் தொலைபேசியின் கேலரிக்கு சென்று விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் டிக்டொக்கைப் போன்று ஃபில்டர், மியூசிக், வீடியோ எபெக்ட்ஸ் உள்ளிட்டவை  குறித்த அம்சத்தில் இருக்குமா என்பது பற்றிய விவரங்கள்  யூ டியூப் நிறுவனத்தினால் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post