யாழ் நியூஸின் ஏற்பாட்டில் நடைபெற்று முடிந்த கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகள் இதோ!

யாழ் நியூஸின் ஏற்பாட்டில் நடைபெற்று முடிந்த கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகள் இதோ!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த யாழ் நியூஸின் கவிதைப் போட்டி இறுதி முடிவுகள்!!

யாழ் நியூஸின் ஏற்பாட்டில் கடந்த சில வாரங்களாக Gulf Ceylon Qatar, Lanka Restaurant Qatar மற்றும் Classify Lanka வின் அனுசரணைகளில் இடம்பெற்று வந்த கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டிய அனைத்து போட்டியாளர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, இன்று போட்டியின் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளோம்.

அதன்படி, கிடைக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான கவிதைகளில் சிறந்த 50 கவிதைகளை தெரிவு செய்து ஏற்கனவே எமது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டிருந்தோம். கடைசி முடிவுகளில் தெரிவு செய்யப்படாதவர்கள் மனம் தளர வேண்டாம்.

மேலும் ஏற்கனவே ஆறுதல் பரிசு 10 என்றும், சமூக வலைத்தளங்களில் கிடைக்கப்பெறும் LIKES மற்றும் SHARES அடிப்படையில் இரண்டு பரிசுகள் என்றும் அறிவித்திருந்தோம். போட்டி கடுமையாக இருந்த காரணத்தால் ஆறுதல் பரிசினை 12 ஆகவும் LIKES மற்றும் SHARES க்கு மூன்றாகும் வழங்க யாழ் நியூஸ் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அனைத்து தெரிவுகளும் பிரபல கவிஞர் அன்சார் எம். ஷியாம் உள்ளடங்கலான எமது நடுவர்குழுவர்களின் வழிகாட்டலுடன் தெரிவு செய்யப்பட்டன. (நடுவர் குழுவிற்கு ஊர் பெயர் எதுவும் வழங்கப்படவில்லை). எதிர்பாராத அளவு போட்டியின் விறுவிறுப்பு தன்மையை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

முக்கிய குறிப்பு: முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் இடங்கள் கவிதையில் தரத்தை மையமாக வைத்து மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளன.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post