பிரபாகரனின் வேண்டுகோளுக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை! -பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபாகரனின் வேண்டுகோளுக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை! -பிரதமர்

LTTE தலைவர் பிரபாகரன் விடுத்த வேண்டுகோளுக்கு ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம்பதெனிய, நாரம்மல திவிநெகும சந்தை வளாகத்தில் நேற்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் வீதிகள் தோறும் கொலை செய்யப்பட்ட யுகமொன்று மீண்டும் ஏற்படாதிருப்பதற்கு இம்முறை தேர்தலில் தெளிவான தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும்.

அன்றைய பயங்கரவாத யுகத்தில் நாட்டில் சுமார் 60 ஆயிரம் படித்த, புத்திசாதுர்யம் மிக்க இளைஞர்களை எம் நாடு இழக்க நேரிட்டது.

பாரியளவிலான பட்டதாரிகள் இந்த பயங்கரவாதத்தின் போது கொலை செய்யப்பட்டதுடன், அதில் 4,210 பேர் குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

அன்று நாட்டில் நிலவிய நிலை தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்வதற்கும், சாட்சி வழங்குவதற்கும் தான் உள்ளிட்ட குழுவினர் முன்வந்ததாக சுட்டிக்காட்டிய பிரதமர் தமது அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

பின்னர் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு வடக்கு கிழக்கை பிரித்துக் கொண்டு தனி அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கு முயற்சித்தாலும் அந்த முயற்சியை தோற்கடிக்க எமது அரசாங்கத்திற்கு முடியுமானதாயிற்று.

அன்று யுத்தம் காரணமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதவற்றை இன்று ஜனநாயகத்தின் முகத்தை காட்டி பெற்றுக் கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சித்தாலும் பிரபாகரன் கேட்டதை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.

பயங்கரவாதம், யுத்தம் என்பவற்றுக்கு மாறாக இளைஞர் யுவதிகளுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து அவர்களது எதிர்காலத்தை வெற்றிகரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.