இன்று (19) மாலை மொனராகலை - செவனகளை பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரச்சார கூட்டம் ஒன்றில் இரு வேட்பாளர்கள் இடையில் முரண்பாடு ஏற்பட்டு அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்பின்னர் உரையாடிய பிரதமர், வேற்பாளர்கள் மோதிக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்.