
குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து, தந்தை மீது மகன் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் காயமடைந்த தந்தை, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேயிடத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.