ஜூலை 31 முதல் எந்தவித வருமான எதிர்ப்பார்ப்பும் இன்றி பஸ் மற்றும் ரயில் சேவை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜூலை 31 முதல் எந்தவித வருமான எதிர்ப்பார்ப்பும் இன்றி பஸ் மற்றும் ரயில் சேவை!

Mahinda Amaraweera
எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் நீண்ட நாள் விடுமுறையுடன் பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக இலங்கை போக்குவரத்து சபை, தனியார் மற்றும் ரயில் சேவைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
$ads={2}
இலங்கை போக்குவரத்து சபை இதற்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும், இதேபோன்று தனியார் துறையினரும் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளனர்.

இதனடிப்படையில் எந்தவித வருமானத்தையும் எதிர்ப்பார்க்காமல், சுமார் 600 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதுடன், தேவைக்கு அமைவாக பயண சேவைகளை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ரயில் சேவைகளையும் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விசேடமாக அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி, பதுளை, வெலிஹத்த வரையில் மேலதிக ரயில் சேவைகளை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்தாக தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.