
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் நேற்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையை தொடர்ந்த அவர்,
"2020 பொதுத்தேர்தல் சூடுபிடித்து இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், 30 வருட யுத்ததின் பிற்பாடு இம்மக்கள் கடந்து வந்த இன்னல்கள் தொடர்பாக பாராளுமன்ற சிங்கள ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சிங்கள மொழியில் எத்திவைத்து, மக்களுக்கான சரியான தீர்வை வழங்க வேண்டும் என்றே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
மேலும் தொல்பொருள் செயலணி தொடர்பாக மன வேதனையடைகின்றேன். இந்த நாட்டில் ஆட்சி செய்கின்றவர்களும் செய்ய இருப்பவர்களும் நான் பாராளுமன்றம் செல்வதில் பீதியில் இருக்கின்றனர். காரணம் இந்த மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை அவர்கள் மொழியில் நான் எடுத்துக் கூறும்போது பாராளுமன்றம் சென்றவர்கள் இதுவரையும் செய்யாதையிட்டு அவர்கள் வெக்கப்படுவார்கள்.
அரசியலில் மட்டுமல்ல நிர்வாகத்துறையில் இருப்பவர்களும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த 4 வருடங்கள் இருந்து இந்த மக்களுக்கு என்ன செய்தார் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
மேலும் அவர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் தற்கொலை குண்டுதாரியின் தலையை இந்து மயானத்தில் புதைத்தவர். அரசாங்க அதிபர் என்ற முறையில் தனது பிரதேசத்தில் இவ்வாறான காரியத்தை செய்துவிட்டு தேர்தலில் நின்று இம் மக்களிடம் எவ்வாறு வாக்கு கேட்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை." என தெரிவித்திருந்தார்.

