
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது போன்ற தவறான பிரச்சாரத்தை பரப்புவதால், பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் தொடர்ந்து இது குறித்து என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைமுறையில் உள்ளன, தேவையற்ற மற்றும் தவறான பிரச்சாரங்களை பரப்பி சமூகத்தை தவறாக வழிநடத்துவதைத் தடுப்பது அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பு என்பதை மேலும் வலியுறுத்தினார்.

