தரப்படுத்தலில் குறைந்த மத்திய தர வருமானம் பெறும் நாடாக இலங்கை!!

தரப்படுத்தலில் குறைந்த மத்திய தர வருமானம் பெறும் நாடாக இலங்கை!!

வருமானம் பெறும் நாடுகளின் தரப்படுத்தல் தொடர்பான புதிய பட்டியலில் இலங்கை உயர் மத்திய தர வருமானம் பெறும் நாடு என்ற நிலைமையில் இருந்து குறைந்த மத்திய தர வருமானம் பெறும் நாடு என்ற நிலைமைக்கு தரம் குறைக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடத்தில் இலங்கையின் தனிநபர் வருமானம் 4,060 அமெரிக்க டொலராக இருந்த நிலையில் இவ்வருடம் அது 4,020 அமெரிக்க டொலராக குறைந்துள்ளதென உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு வருமானம் குறைந்த நாடுகளாக தரம் குறைக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளாக அல்ஜீரியா மற்றும் சூடான் ஆகியவை தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post