
சீனா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து இன்று (18) அதிகாலையும் நேற்றிரவும் (17) அவர்கள் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக சுற்றுலா ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த PCR கட்டணம் உள்ளிட்ட, இவ்வாறு அவர்கள் தனிமைப்படுத்தல் காலத்தில் தங்கியிருக்கும் சுற்றுலா ஹோட்டல்களுக்கான கட்டணமும், அவர்களது விமானச்சீட்டுக்கான கட்டணத்துடன் சேர்த்து அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது அரசாங்கத்தினால் நடாத்திச் செல்லப்படும் 72 தனிமைப்படுத்தல் நிலையங்களில், உச்சபட்ச அளவில் தனிமைப்படுத்தப்படுவோர் காணப்படுவதால், வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.