ரணில் என்னை ஆட்டிவைக்க பார்த்தார்; ஆனால் நான் அவரை ஆட்டிவிட்டேன். - மைத்திரி

ரணில் என்னை ஆட்டிவைக்க பார்த்தார்; ஆனால் நான் அவரை ஆட்டிவிட்டேன். - மைத்திரி

தான் ஜனாதிபதியாக பதவி வகித்த சுமார் ஐந்தாண்டு காலத்தில் தான் கசப்பான அனுபவங்களை பெற்றுக் கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் வைத்து முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தனக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் மற்றும் நெருக்கடிகள் ஏற்பட்டதை முழு நாடும் அறியும்.

பிரதமரான ரணில் விக்ரமசிங்க தனக்கு தேவையான வகையில் என்னை ஆட்டிவிக்க முயற்சித்தார். எனினும் அவரால் அதனை செய்ய முடியாமல் போனது. ரணில் விக்ரமசிங்கவை எனக்கு தேவையானபடி ஆட்டுவித்தேன்.

இதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களை பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருப்பதை தடுத்து, இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கும் வகையில் தெரிவு செய்ய வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post