இலங்கை கோள் மண்டல காட்சிகள் (Planetarium) மீளத்திறக்க உத்தரவு !

இலங்கை கோள் மண்டல காட்சிகள் (Planetarium) மீளத்திறக்க உத்தரவு !

கொரோனா தொற்றின் அபாயம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டல காட்சிகள் (Planetarium) எதிர்வரும்  07ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுகாதார பிரிவு மற்றும் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக மீள ஆரம்பிப்பதற்குறிய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை முன்னெடுப்பதற்காக அனைத்து காட்சிகளும் வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களை மாத்திரம் பங்குகொள்ளச் செய்து காட்சிகள் நடைபெறும் என்று உயர் கல்வி, தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் பணிப்பாளர் (இலங்கை கோள் மண்டலம்) கே .அருணு பிரபா பெரேராவினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post