ஹோட்டல் உரிமையாளர் தூங்கிய நிலையில் சடலமாக மீட்பு; பிலியந்தலையில் சம்பவம்!

ஹோட்டல் உரிமையாளர் தூங்கிய நிலையில் சடலமாக மீட்பு; பிலியந்தலையில் சம்பவம்!

பிலியந்தலை பகுதியில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான 50 வயது நபர், கட்டிலில் தூங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கெஸ்பேவ, குருகம்மான வீதியிலுள்ள ஹோட்டலின் உரிமையாளரான குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இன்று (07) அதிகாலை 4.00 மணியளவில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்க்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கெஸ்பேவ, குருகம்மான வீதியைச் சேர்ந்த குறித்த வர்த்தகர், தலையின் பின்புறத்தில் காயத்துடன் தான் தூங்கும் கட்டிலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அவரது மனைவி காயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இடம்பெற்றுள்ளதோடு, சடலம் பிரேதப் பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post