போலி நாளிதழ் அச்சிட்டு வெளிநாட்டில் அகதி அந்தஸ்து பெற முயன்றவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போலி நாளிதழ் அச்சிட்டு வெளிநாட்டில் அகதி அந்தஸ்து பெற முயன்றவர் கைது!

போலி நாளிதழ் அச்சிட்டு அதனூடாக ஜேர்மனியில் அகதி அந்தஸ்து பெற்றுக் கொள்ள முயற்சித்த நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

மிரிஹான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

இது தொடா்பில் அவர் மேலும் கூறியதாவது,

பிரபலமான தமிழ் நாளிதழ்களை போன்று மூன்று பத்திரிகைகளை அச்சிட்டு வெளிநாட்டுக்கு வழங்கி வந்த நபரொருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இவ்வாறு மூன்று பத்திரிகைகளை அச்சிட்டுள்ளதுடன் அதில் போலி செய்திகளை உள்ளடக்கியுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த போலி பத்திரிகையின் ஊடாக தான் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகியிருப்பதாக காண்பித்து வெளிநாட்டுக்குச் செல்ல முற்பட்டுள்ளதுடன், அதனூடாக குறித்த நாட்டில் அகதி அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளார்.

அதற்கமைய சந்தேக நபர் முதலில் ருமேனியா நாட்டுக்கு சென்று பின்னர் அங்கிருந்து ஜேர்மன் செல்வதற்கு எண்ணியுள்ளதுடன் இதற்காக வெளிநாட்டு பயண முகவர் நிலையமொன்றுக்கு கட்டணமும் செலுத்தியுள்ளார்.

தமிழ் நாளிதழ் ஒன்றின் பக்க வடிவமைப்பு பிரிவில் பணிபுரிந்துள்ள குறித்த சந்தேக நபர், பல போலி ஆவணங்களை தயாரித்து வழங்கியுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் செயற்பாடுகளுக்கு ஜேர்மனியில் உள்ள இருவரின் உதவியைப் பெற்றுக் கொடுத்துள்ளதுடன், அவரின் இந்த செயற்பாட்டினால் இலங்கை அரசாங்கத்திற்கும் பெரும் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபரை குற்றப் புலனாய்வு பிரிவினர் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தி வருவதுடன் புலம் பெயர் தமிழ் அமைப்புகளினால் இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.