O/L மற்றும் A/L மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் விசேட அறிக்கை வெளியீடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

O/L மற்றும் A/L மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் விசேட அறிக்கை வெளியீடு!

School students
ஜூலை மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் பரவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக பாடசாலைகளை திறக்கும் தினம் மற்றும் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சி இதனை தெரிவித்துள்ளது.

ஏனைய மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ளது.

மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாடசாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு பாடசாலைகளை தயார்ப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு சகல பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் ஜூலை மாதம் 28 ,29, 30, 31 ஆம் திகதிகள் பாடசாலையில் தங்கியிருக்க வேண்டும்.

குறித்த கால பகுதியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்துரையாடி தேர்தல் நடவடிக்கைக்காக பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.