கொரோனாவினால் ஹோட்டல் உணவு பண்டத்தில் ஏற்பட்ட பாரிய விளைவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவினால் ஹோட்டல் உணவு பண்டத்தில் ஏற்பட்ட பாரிய விளைவு!

அண்மைக்காலமாக இலங்கையின் சந்தையில் உணவுப்பொருடகள் சிலவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் உணவகங்களில் மஞ்சள் தூளுக்கு பதிலாக 'டை' பயன்னபடுத்தி உணவுகள் தயாரிக்கப்படும் மோசடி நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மஞ்சள் தூளுக்கு பதிலான டை பயன்படுத்துவதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மாத்திரமின்றி மக்கள் பயன்படுத்தும் தேயிலை தூள் மற்றும் மசாலா தூளின் தரம் தொடர்பில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவற்றிற்கு டை பயன்படுத்தி சந்தையில் விற்பனை செய்யும் மோசடி தகவல்களை வெளிப்படுத்துவதற்கு தாம் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.