ரணில் எமது வழிக்கு வரவில்லையென்றால் அவரை தலைமைப் பதவியிலிருந்து விலகச்சொல்வோம்! -நவீன் திஸ்ஸநாயக்க

ரணில் எமது வழிக்கு வரவில்லையென்றால் அவரை தலைமைப் பதவியிலிருந்து விலகச்சொல்வோம்! -நவீன் திஸ்ஸநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு கட்சியால் எந்த வேலைகளும் நடக்கவில்லை என்பதற்காக கட்சியின் சின்னமான யானையை கொலை செய்ய இடமளிக்க முடியாது என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வலப்பனை பிரதேசத்தில் இன்று (05) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 06 ஆம் திகதிக்கு பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் பலமிக்கதாக உருவாக்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை சரியான வழிக்கு கொண்டு வந்து கட்சியை வலுப்படுத்துவோம். அப்படி அவர் சரியான வழிக்கு வரவில்லை என்றால், அவரை கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து விலகுமாறு கோருவோம்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் ஒரே மேடையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட போதிலும் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்கள் விருப்பு வாக்கு போட்டி காரணமாக தனித்தனியாக பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.

எதிர்வரும் 06ஆம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு செல்லாத கட்சியினரை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post