எனக்கு பல வெளிநாட்டு அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது; எனது பலத்தை உணர்ந்து பேசுங்கள்!! -மைத்திரிபால சீற்றம்

எனக்கு பல வெளிநாட்டு அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது; எனது பலத்தை உணர்ந்து பேசுங்கள்!! -மைத்திரிபால சீற்றம்

Maithri
பொலன்னறுவை மாவட்டத்தில் வரலாறு பேசக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்திய என்னைப்பற்றி எனது பகுதியைச் சேர்ந்த சிலர் தவறான வதந்திகளை பரப்புகிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பான்மையானவர்கள் அதன் மதிப்பை நன்கு அறிந்திருந்தாலும், சிலர் எனக்கு வாக்களிக்கக் கூடாது எனக் கூறி எனது வாக்காளர்களை மூளை சலவை செய்து அவர்களை எனக்கு வாக்களிக்காமல் செய்ய முயற்சிக்கின்றனர்.

அவர் பொலன்னறுவையில் இடம்பெற்ற கட்சி கூட்டம் ஒன்றினிலேயே இவ்வாறு பேசினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களுடன் பேணிய நட்பை இன்னும் பாதுகாத்து வருகிறேன். எனக்கு எப்போது வேண்டுமானாலும் அவர்களை தொடர்பு கொள்ளும் அளவுக்கு வலிமை உள்ளது. அத்தகைய ஒரு நபரின் மதிப்பை இன்று பொலன்னறுவையில் சிலர் மறந்துவிட்டனர்.

மேலும் எனது ஆதரவாளர்களை எனக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்பவர்களிடம் கேட்கிறேன், நீங்கள் பொலன்னறுவை மக்களுக்கு என்ன செய்துள்ளீர்கள், உங்கள் கிராமத்தானின் பலத்தையும், மதிப்பையும் புரிந்துகொண்டு பேசுங்கள்.' என தனது உரையில் தெரிவித்திருந்தார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post