கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில், அனுராதபுரம், ராஜாங்கனை இலக்கம் 01, 03 மற்றும் 05 ஆகிய பிரதேசங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிகட நோயாளியுடன் தொடங்கிய கொரோனா பரவல், கந்தகாடு மறுவாழ்வு மையத்தில் நோயாளிகளுக்கும் அவர்களின் தொடர்புகளுக்கும் சிகிச்சையளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.