பாடசாலை வேன்களுக்கு மேலும் 6 மாத கால லீசிங் சலுகை!

பாடசாலை வேன்களுக்கு மேலும் 6 மாத கால லீசிங் சலுகை!

மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சங்கத்தின் வேண்டுகோளை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஜனாதிபதி, பாடசாலை வேன்களுக்கு லீசிங் கடன் தவணை கொடுப்பனவுக்கு மேலும் 06 மாதகால சலுகைக்காலம் ஒன்றை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார்.

கொரோனா பரவல் நிலை காரணமாக, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதனால், தமது சங்கத்தின் உறுப்பினர்களால் வாகன லீசிங் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, அச்சங்கத்தினர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (27) இரண்டாம் நாளாகவும் குருணாகல் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு மாவத்தகம பொதுச் சந்தை வளாகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post