உயர்தர பரீட்சை நடத்தும் திகதியை தீர்மானிக்க மக்களின் கருத்தை எதிர்பார்க்கும் அமைச்சு!!

உயர்தர பரீட்சை நடத்தும் திகதியை தீர்மானிக்க மக்களின் கருத்தை எதிர்பார்க்கும் அமைச்சு!!

Examination Date Fixing
2020 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சைகளை நடத்தும் தினம் தொடர்பாக மக்களின் கருத்தை அறிய கருத்து கணிப்பை நடத்த கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 07 ஆம் திகதி பரீட்சைகளை நடத்துவது குறித்து மக்களின் கருத்தை அறிய இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட உள்ளது.

கல்வியமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இணையத்தளம் (Google Forms) வழியாக நடத்தப்படும் இந்த கருத்து கணிப்பு கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் 10 ஆம் திகதி முடிவடையவுள்ளது.

இது தொடர்பாக தமது கருத்துக்களை https://forms.gle/HTaoMt6fe2sqQxXJ7 இணைப்பின் மூலம் தெரிவிக்குமாறு கல்வியமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post