அமைதியான முறையில் நடந்து முடிந்த முதல் வாக்களிப்பு!

அமைதியான முறையில் நடந்து முடிந்த முதல் வாக்களிப்பு!

பொதுத் தேர்தலுக்கான முதலாம் கட்ட அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பணிக்குழாமினருக்கு இன்றைய தினம் அஞ்சல் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதற்கமைய, காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் அஞ்சல்மூல வாக்களிப்புகள் இடம்பெற்றன.

இன்றைய அஞ்சல் மூல வாக்களிப்பு வெற்றிகரமாக இடம்பெற்றது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேநேரம், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அஞ்சல்மூல வாக்களிப்பு இடம்பெற்றமை அவதானிக்க முடிந்ததாக கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, தேர்தல் அதிகாரிகளையும், காவல்துறையினரையும் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர், தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாவிட்டால், தேர்தலை நடத்தவது சிரமமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அபாயத்தை தடுப்பதுற்கு தேவையான நடவடிக்கைகைகளை முன்னெடுக்கப்படுகின்றது

பொது தேர்தல் பிரசாரக் கூட்டங்களின்போது கைகளை கழுவுதல் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணுதல் ஆகிய இரண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் அபாயத்தை தடுக்க முடியும்.

சுகாதார வழிமுறைகளை கட்டயாம் வர்த்தமானியில் அறிவிக்குமாறு உரிய அதிகாரிகளிடம் தாம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் கூறியுள்ளார்.

அது இல்லாவிடின் பொது தேர்தலை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், தேர்தலை பிற்போடுமாறு எவரும் எம்மிடம் கோரவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசாப்பிரிய தெரிவித்துள்ளார்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.