தேசிய பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!!

தேசிய பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!!

நாட்டில் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தேசிய பரீட்சைகள் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

கடந்த மூன்று மாத காலமாக ஊரடங்கு சட்டம், வைரஸ் பரவல் என்பவற்றின் காரணமாகக் கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

அதனைக் கருத்திற் கொண்டு மாணவர்களின் நலன் கருதி கல்விப் பொதுத்தராதர பரீட்சை, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைகள் என்பன செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டன.

அத்தோடு, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை களைச் செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த திகதியில் மாற்றம் ஏற்படக் கூடும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post