மொட்டுக் கட்சி வேட்பாளருக்கு மரண தண்டனை!!

மொட்டுக் கட்சி வேட்பாளருக்கு மரண தண்டனை!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்தை பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்திருந்தது.

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான நிலந்த ஜயகொடி மற்றும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு இவ்வாறு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post