
அதன்படி, மீண்டும் குறித்த நபரிடம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று (25) அதிகாலை கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற குறித்த கொரோனா தொற்றாளர் சுமார் 8 மணிநேரத்திற்கு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

