A/L 2019 மீள்திருத்தம் முடிவுகள் வெளியீடு தொடர்பான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

A/L 2019 மீள்திருத்தம் முடிவுகள் வெளியீடு தொடர்பான அறிவித்தல்!

க.பொ.த உயர்தர பரீட்சை 2019, மீள்திருத்தல் முடிவுகளை எதிர்வரும் ஆகஸ்ட் 02 ஆம் வாரத்திற்கு முன்னர் எதிர்பார்க்குமாறு பரீட்சைகள் ஆணையர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'தற்போது பெரும்பாலான பணிகளை முடித்துவிட்டோம், இன்னும் சில கணக்கீடுகளை செய்து வருகிறோம். இந்த மறு கணக்கீடுகளுக்கு 63 பாடங்கள் உள்ளன, மேலும் "Z" மறு கணக்கீடு செயல்முறையை மீண்டும் கணக்கெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது தொடர்பில் மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்.' என தெரிவித்தார்.

மேலும் மீள் திருத்த முடிவுகளை எதிர்வரும் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்கு முன்னதாக https://doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியகோபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் பொது சேவை பணிநிறுத்தம் காரணமாகவே பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.