நாம் சிங்கப்பூரை போன்று முறைமைகளை செயற்படுத்த வேண்டும்!

நாம் சிங்கப்பூரை போன்று முறைமைகளை செயற்படுத்த வேண்டும்!

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதை தான் ஆதரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை நியாயமாக வெளிப்படை தன்மையுடன் நடத்த போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே சஜித் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இளைய தலைமுறையினரை மாத்திரமல்லாது பாடசாலை மாணவர்களை கூட, தற்போது போதைப்பொருள் விற்பனையாளர்கள் தமது பிடிக்குள் சிக்க வைத்துள்ளனர்.

இந்த குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து, சிறையில் இருந்தவாறு தமது வர்த்தகத்தை மேற்கொள்ள அரசாங்கம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கின்றது.

போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின் சிங்கப்பூரில் போதைப்பொருளை கட்டுப்படுத்த கையாளப்படும் நடைமுறையை அமுல்படுத்த வேண்டும்.

சட்டத்தின் மூலம் நீதி கிடைக்கும் வரை குற்றவாளிகளுக்கு சிங்கப்பூரில் எவ்வித மன்னிப்பு வழங்கப்படுவதில்லை.

இலங்கையில் உள்ள போதைப்பொருள் விற்பனையாளர்கள் வெளியில் இருந்து செய்வதை விட சிறையில் இருந்து அந்த வர்த்தகத்தை சிறப்பாக செய்கின்றனர்.

இதனால், சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள முறையை பின்பற்ற வேண்டும். அத்துடன் தண்டனை வழங்கும் நீதித்துறை கட்டமைப்பு அழுத்தங்கள் இன்றி செயற்படும் பக்கசார்பற்றதாக இருக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post