இனி வரும் காலங்களில் நாட்டில் ஏனைய இடங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் - இராணுவ தளபதி

இனி வரும் காலங்களில் நாட்டில் ஏனைய இடங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் - இராணுவ தளபதி

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து மொத்தமாக 492 கொரோனா தொற்றாளர்கள்இனங்காணப்பட்டுள்ளனர்.

உறுதி செய்யப்பட்ட 16 கொரோனா தொற்றாளர்கள் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு சிறைக்கைதிகள் மற்றும்பயிற்றுனர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் இராணுவ முகாம் ஒன்றல்ல, நீதி அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு நிலையம் எனவும்அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


நேற்றைய தினம் புனர்வாழ்வு நிலையத்தில் மட்டும் 96 நபர்கள் கொரோனா தொற்றுக்க்ய் இலக்கானார்கள்.

நேற்ற்ய் இராஜாங்கனை பகுதியில் கொரோனா தொற்றுக்கு இலக்கான ஆறு நபர்களும் புனர்வாழ்வு நிலைய பயிற்றுனருடன்நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவித்தார்.

விடுமுறைகளில் வீடுகளுக்கு சென்றிருக்கும் புனர்வாழ்வு நிலைய அனைத்து பயிற்றுனர்களும் உடனடியாக திரும்பி வருமாறுவலியுறுத்தப்பட்டுள்ளதோடு அவர்கள் வேறு பிரதேசங்களுக்கும் பிரயாணம் செய்திருக்கு வாய்ப்பு இருப்பதானால் நாட்டில் ஏனையபாகங்களிலிருந்தும் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் இனி வரும் காலங்களில் இனங்காணப்படலாம் எனவும் இராணுவதளபதி தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான சிறைக்கைதிகள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், மக்கள் சுகாதார அமைச்சின்வழிமுறைகளை சரிவர பின்பற்றி நடக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post