ரிஷாத் பதியுதீனுக்கு வாக்களியுங்கள் - ரவூப் ஹக்கீம்

ரிஷாத் பதியுதீனுக்கு வாக்களியுங்கள் - ரவூப் ஹக்கீம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு வாக்களிப்பது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் கடமையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி, தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்கை ஆதரித்து மன்னாரில் நேற்று (01) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


அங்கு தொடர்ந்தும் பேசிய மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

இன்று இலங்கை முஸ்லிம் மக்களை பொறுத்தவரையில் ரிஷாத் பதியுதீனையும் ஒரு தலைவராக பார்க்கின்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எங்களுக்குள் பல கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் நாம் அதனை பேசிக்கொண்டிருப்பதில் பலனில்லை. அது சமூகத்தை நாமே மலினப்படுத்துவதற்கு சமமாகும்.

எனவே, வன்னி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஹூனைஸ் பாருக்கிற்கு விருப்பு வாக்கை அளிக்கும் மு.கா போராளிகள் ரிஷாத் பதியுதீனுக்கும் ஒரு விருப்பு வாக்கை வழங்க வேண்டும் என்றார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post