விபத்தினால் உயிரிழப்பை ஏற்படுத்திய குசலுக்கு பிணையில் விடுதலை!

விபத்தினால் உயிரிழப்பை ஏற்படுத்திய குசலுக்கு பிணையில் விடுதலை!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் பாணதுறை நீதவான் நீதிமன்றில் இன்று (6) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


பாணதுறை, ஹொரெதுடுவ பகுதியில் நேற்று (06) அதிகாலை 5 மணிக்கு குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தின்போது 64 வயதுடைய நபரொருவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து குசல் மென்டிஸ் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post