ஓகஸ்ட் முதலாம் திகதி கட்டார் எல்லை திறப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஓகஸ்ட் முதலாம் திகதி கட்டார் எல்லை திறப்பு!

வெளிநாட்டு பயணிகள் கட்டார் வருவதற்கு ஓகஸ்ட் முதலாம் திகதி நாட்டு எல்லையை திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்நாட்டு பிரஜைகள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் நாட்டிற்கு வர மற்றும் வெளியேறுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

கொரோனா தொற்று அச்சுறுத்தல் குறைவாக இருக்கும் நாடுகளில் இருந்து வருபவர்கள் கொரோனா சோதனைக்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதோடு ஒரு வாரம் வீட்டில் சுய தனிமையில் இருப்பதற்கான உறுதி மொழியில் கையெழுத்திட வேண்டும் என்று அரச தொடர்பாடல் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏழு நாட்களின் பின் பயணிகளுக்கு இரண்டாவது சோதனை மேற்கொள்ளப்பட்டு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டால் விடுவிக்கப்படவுள்ளனர்.

எனினும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தலுக்காக அரச நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்படுவார். இந்த குறைந்த அபாயம் கொண்ட நாடுகள் பட்டியலில் இடம்பெறாத நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தாம் பயணிப்பதற்கு 48 மணி நேரத்திற்குள் தமக்கு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றினை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கை குறைந்த அபாயம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இவ்வாரம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.