வாய்ப்புற்று நோயினால் ஏற்படும் இறப்புக்கள் தீவிரம்!

வாய்ப்புற்று நோயினால் ஏற்படும் இறப்புக்கள் தீவிரம்!

வாய் புற்றுநோயினால் நாளாந்தம் மூவர் உயிரிழப்பதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாய் புற்றுநோயுடன் நாளாந்தம் 6 பேர் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வெற்றிலை, புகையிலை, பாக்கு, சிகரட் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களினால் ஆண்களே அதிகமாக புற்றுநோய்க்கு இலக்காகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கும் வாய் புற்றுநோய் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வெற்றிலை பயன்பாடு மற்றும் எச்சில் துப்புவதனூடாக வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பதாக சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post