கொரோனா அபாயம் தீவிரம் - மாரவில பிரதேசத்தில் பல குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா அபாயம் தீவிரம் - மாரவில பிரதேசத்தில் பல குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு!

சிலாபம் – மாரவில பிரதேசத்தில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலைய ஆலோசக பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
10 வீடுகளை சேர்ந்த 45 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவிட் – 19 தொற்றாளராக இனங்காணப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகரான பெண்ணுடன் நெருங்கிப் பழகியவர்களும் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மேலும், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து விடுமுறைக்காக சென்றுள்ள 8 ஆலோசகர்களை மீள அழைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.