குசல் மெண்டிசின் வாகன விபத்து தொடர்பில் பொலிஸார் தகவல்களை மூடி மறைத்தனரா? முழு விபரம் !!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குசல் மெண்டிசின் வாகன விபத்து தொடர்பில் பொலிஸார் தகவல்களை மூடி மறைத்தனரா? முழு விபரம் !!!

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல்மென்டிசின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவங்கள் குறித்த உண்மைகளை பொலிஸ் அதிகாரிகள் மறைத்துள்ளனரா என ஐலண்ட் நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.

குசல்மென்டிசின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் உண்மைகளை மறைப்பதில் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என சில வட்டாரங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன என ஐலன்ட் தெரிவித்துள்ளது


பாணந்துறையில் சைக்கிளில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த 64 வயது நபரை மென்டிசின் 44 மில்லியன் ரேஞ்ரோவர் மோதியது என சுட்டிக்காட்டியுள்ள ஐலன்ட் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துக்களில் விபத்திற்கு காரணமானவர் 14 தடுப்புகாவலில் வைக்கப்படுவது வழமை என தெரிவித்துள்ளது.
எனினும் பொலிஸார் அரசியல்வாதிகளின் பிள்ளைகளையும், செல்வந்தர்களின் பிள்ளைகளையும்,பிரபலமானவர்களையும் விடுதலை செய்யும் போக்கு அதிகரித்து வருகின்றது என ஐலன்ட் தெரிவித்துள்ளது.

மேலும் இது மோதிவிட்டு தப்பியோடும் விவகாரம்,மென்டிஸ் தனது வாகனத்தை நிறுத்திகாயம்பட்டவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தார் என்றால் அவரை காப்பாற்றியிருக்கலாம், என தெரிவித்துள்ள ஐலன்ட் விபத்து இடம்பெற்று 40 நிமிடங்களின் பின்னரே அம்புலன்ஸ் வந்துள்ளது , மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட வேளை அந்த நபர் உயிரிழந்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
பொலிஸார் குசல்மென்டிஸ் மதுபோதையில் இருக்கவில்லை என தெரிவிக்கின்றனர்,ஆனால் அவர் விபத்தை ஏற்படுத்திவிட்டு வீட்டிற்கு சென்று சில மணிநேரத்தின் பின்னரே பொலிஸ்நிலையம் சென்றுள்ளார்.

மேலும் பொலிஸார் குசல்மென்டிசை தாமதமாகவே மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ள ஐலன்ட் அதன் காரணமாக மென்டிஸ் மதுபோதையிலிருந்தார் என்பதை நிருப்பிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது மேல்மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குறித்தே கவனம் திரும்பியுள்ளது என ஐலண்ட் தெரிவித்துள்ளது.
குசல்மென்டிஸ் விவகாரத்தை மூடிமறைதத முக்கிய நபர் அவரே என விசாரiணை முன்னெடுத்துள்ள பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன என ஐலன்ட் குறிப்பிட்டுள்ளது


மேலும் கமல்புஸ்பகுமார என்ற பொலிஸ் அதிகாரியும் இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளார்,அவர் கிரிக்கெட் வீரர்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்துள்ளார், மேலும் கிரிக்கெட் வீரர்களின் முகவர் என கருதப்படும் அசங்க பெரேராவிற்கும் இந்த விடயத்தில் தொடர்புள்ளது என ஐலன்ட் தெரிவித்துள்ளது.

உயிரிழப்பை ஏற்படுத்தியது,வேகமாக வாகனத்தை செலுத்தியது, பிழையான திசையில் வாகனத்தை செலுத்தியது,ஆகியவற்றிற்காக குசல்மென்டிசிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும் ஆனால் பொலிஸார் இவற்றை புறக்கணித்துள்ளனர் என ஐலன்ட் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.