நேற்று கொழும்பில் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டு முடக்கப்பட்ட இடத்தின் இன்றைய நிலவரம்!

நேற்று கொழும்பில் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டு முடக்கப்பட்ட இடத்தின் இன்றைய நிலவரம்!

கொழும்பு - ஜிந்துப்பிட்டி பகுதியை சேர்ந்த 154 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, கொழும்பு - ஜிந்துபிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பியிருந்தார்.

அவர் தனது வீட்டில் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் அவருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஜிந்துப்பிட்டி பகுதியில் 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.


இவ்வாறான நிலையில், ஜிந்துப்பிடியில் 29 குடும்பங்களை சேர்ந்த சுமார் 154 பேர் கண்டகாடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி இன்றையதினம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,

இந்தியாவில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நிலையில் கொரோனா தொற்று இல்லை என பீசிஆர் பரிசோதனையில் தெரியவந்த நபருக்கு சுய தனிமைப்படுத்தலின் பின்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் உடனடியாக ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அத்துடன் அவரது குடும்பத்திலுள்ள எட்டு பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

என்ற போதிலும் முன்னெச்சரிக்கையாக அப்பகுதியிலிருந்து 29 குடும்பங்களை வெளியேற்றி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தொற்று பரவாமல் தடுப்பதற்காக நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் அந்த பகுதியினை முடக்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.