கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கும் திகதியில் மாற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கும் திகதியில் மாற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என விமான நிலையம் மற்றும் சேவையின் உப தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விமான நிலையத்தை திறக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. எனினும் பின்னர் திறக்கப்படும் திகதி ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.


கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதனை கருத்திற் கொண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி பின்னர் ஒரு நாள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் திறக்கப்படும் உரிய திகதியை இன்னமும் அறிவிக்க முடியாத நிலை காணப்பட்டுள்ளதாக ரஜீவ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையும் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post