யாசகரரின் வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாக்கள் - முழு விபரம்

யாசகரரின் வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாக்கள் - முழு விபரம்

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலம் மேற்கொண்ட விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையாளரான மர்வின் ஜானா என்பவருக்கு சொந்தமான பணமே இவ்வாறு யாசகரின் வங்கி கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது.

இந்த யாசகரின் பெயரில் அத்திடிய தனியார் வங்கி ஒன்றில் கணக்கு திறந்து பணம் வைக்கப்படப்பட்டுள்ளது.

வங்கி புத்தகம் மற்றும் வங்கி அட்டை மர்வினின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாசகரின் கணக்கிற்கு கடந்த 11 மாதங்களில் 1400 இலட்சம் ரூபாய் வைப்பிடப்பட்டுள்ளது.

மர்வின் ஜானா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post